Janu / 2023 ஜூலை 25 , பி.ப. 12:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் உற்பத்தித் திறன் செயற்பாடுகளை மேலும் மேம்படுத்தும் நோக்கில் கிளை ரீதியாக அமைக்கப்பட்டுள்ள தரவட்டக் குழுத் தலைவர்களுடனான கலந்துரையாடல் திங்கட்கிழமை (24 இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலானது, மேலதிக அரசாங்க அதிபர் திரு. எஸ்.முரளிதரன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது, கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் உற்பத்தித் திறன் செயற்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் கிளை ரீதியாக அமைக்கப்பட்டுள்ள தரவட்டக் குழுக்கள் தொடர்பான செயற்பாடுகளை மேலதிக அரசாங்க அதிபர் திரு. எஸ்.முரளிதரன் அவர்கள் கேட்டறிந்து கொண்டார்.
தரவட்டக்குழு செயற்பாடுகளின் தற்போதைய நிலமைகள் தொடர்பான விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டதோடு இதனூடாக பெறப்பட்ட தீர்வுகளை நடைமுறைபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டன.
மேலும் புதிய தரவட்டக் குழுக்களின் உருவாக்க எண்ணக்கருக்கள் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் எட்டப்பட்டன.

இக் கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்ட செயலக உற்பத்தித் திறன் பிரிவின் இணைப்பாளர், உத்தியோகத்தர்கள், கிளை ரீதியாக ஒதுக்கப்பட்டுள்ள தரவட்டக் குழுக்களின் தலைவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
13 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
2 hours ago
3 hours ago