Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Freelancer / 2023 ஓகஸ்ட் 07 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்ரமணியம் பாஸ்கரன்
எமது சுற்றாடலை பேணுவதற்கு அனைவரும் பொறுப்புணர்வுடன் முன்வர வேண்டும் என கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சுற்றாடல் அமைச்சின் மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் இலத்திரணியல் கழிவுகளை முறையாக சேகரிக்கும் ஒரு வார கால நிகழ்ச்சி திட்டம் கிளிநொச்சி யில் திங்கட்கிழமை (07) ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில் பொதுவாக எங்கள் மத்தியிலே ஒழுக்கம் உருவாக வேண்டும், அதாவது என்ன கழிவாக இருந்தாலும் அதனை முறைப்படி அகற்றும் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் அதனை விடுத்து பொறுப்பற்ற விதத்திலே பொது இடங்களில் கழிவுகளை போடுவதனால் சுற்றாடல் பாதிப்படைகின்றது
அதிலும் இந்த இலத்திரணியல் கழிவுகள் என்பது மிக மிக ஆபத்தானவை. இந்த இல்லத்திரனியல் பொருட்களின் பாவனை என்பது வடமாகணத்தில் அதிகளவில காணப்படுகிறது சாதாரணமாக நாங்கள் பாவிக்கின்ற கைத்தொலைபேசி கூட ஒருவருக்கு இரண்டு கைத்தொலைபேசிகள் அல்லது அதற்கு மேலும் காணப்படுகின்றன.
இந்த இலத்திரனியல் கழிவுகளை சேகரிக்கின்ற செயற்பாடானது அனைத்து இடங்களிலும் விரிவு படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்த அவர் எங்களது சுற்றாடலை பேணுவதற்கு அனைவரும் பொறுப்புடன் முன்வர வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
7 hours ago