2025 மே 15, வியாழக்கிழமை

போதைக்கு அடிமையான நால்வர் கைது

Janu   / 2023 ஓகஸ்ட் 09 , பி.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதன்கிழமை (09) முல்லைத்தீவு கள்ளப்பாடு தெற்கு கிராமத்தினை சேர்ந்த குடும்பஸ்தர் உள்ளிட்ட நால்வர் போதைபாவனையில்  ஈடுபட்டிருந்த வேளை முல்லைத்தீவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.

கைதுசெய்யப்பட்ட நபர்கள் கஞ்சா குடு போன்ற போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளதை தொடர்ந்து முல்லைத்தீவு பொலிஸார் குறித்த மருத்துவபரிசோதனை மேற்கொள்ள முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளார்கள்.

இதன்போது இவர்கள் நால்வரும் போதைக்கு அடிமையானவர்கள் என தெரியவந்துள்ளதை தொடர்ந்து குறித்த நால்வரையும் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளார்கள்.

செ.கீதாஞ்சன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .