Janu / 2023 ஓகஸ்ட் 06 , மு.ப. 09:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரான புளொட் அமைப்பின் அங்கத்தவர் சொக்கலிங்கம் சபேசன் (வயது 44) மீது சனிக்கிழமை (05) தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தாக்கல் தொடர்பாக தெரிய வருவது,
சுன்னாகம் ஐயனார் கோவில் பகுதியில் வசிக்கும் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றுக்கு முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் புலம்பெயர் மக்களின் உதவியில் குழாய் கிணறு ஒன்றை அமைத்துக் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் குறித்த பெண் தலைமைத்துவ குடும்பத்தின் அயல் வீட்டுக்காரர் குழாய் அமைத்ததால் தன்னுடைய வீட்டு கிணறு பாதிப்படைகின்றது என தெரிவித்து பிரதேச சபை உறுப்பினர் மீது கடும் தாக்கல் நடத்தியுள்ளார்.
தாக்குதலில் காயமடைந்த பிரதேச உறுப்பினர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததோடு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார். இத்தாக்குதல் தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
பு. கஜிந்தன், நிதர்ஷன் வினோத்

8 minute ago
22 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
22 minute ago
3 hours ago