Freelancer / 2022 டிசெம்பர் 21 , மு.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சண்முகம் தவசீலன்
2020 ஆம் ஆண்டுக்கான தேசிய உற்பத்தித்திறன் போட்டியில், முல்லைத்தீவு மாவட்ட செயலகம் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்ட மகிழ்ச்சியை அலுவலக மட்டத்தில் நினைவு கூரும் நிகழ்வு, மாவட்ட செயலக பிரதம உள்ளகக் கணக்காய்வாளரும் உற்பத்தித்திறன் பிரிவின் பிரதம இணைப்பாளருமான கே. லிங்கேஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இன்று முன்தினம்(19) சிறப்புற நடைபெற்றது.
இந்நிகழ்வில், மாவட்ட அரசாங்க அதிபர் க. விமலநாதன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். இதன்போது முல்லை. மாவட்ட செயலகத்துக்கு கிடைத்த கௌரவத்தை நினைவுகூரும் முகமாக கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
கிடைக்கப்பெற்ற குறைந்தளவு பௌதீக, மனித வளங்களை வினைத்திறனான வகையில் சேவையாற்றியமைக்குக் கிடைத்த அங்கிகாரமாகவே இவ் விருது நோக்கப்படுகிறது.

4 minute ago
37 minute ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
37 minute ago
6 hours ago