Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Niroshini / 2015 நவம்பர் 22 , மு.ப. 06:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்
இலங்கையின் பல பாகங்களிலுமிருந்து வரும் சகல மரக்கறி வகைககளையும் மொத்தமாக விற்பனை செய்யும் சகல வசதிகளையும் கொண்ட மரக்கறி மொத்த விற்பனை நிலையமும் களஞ்சியசாலையும் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசத்தை மையப்படுத்தி நிந்தவூர் பிரதேசத்தில் அமைப்பதற்கான திட்டம் ஒன்றை முன்னெடுத்து வருவதாக தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் ஸ்தாபகர் மொஹிடீன் பாவா இன்று (22) தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
மரக்கறி வியாபாரம் செய்யும் சிலர் தங்களின் வசதிகளுக்கேற்ப மித மிஞ்சிய விலையில் சர்வாதிகாரப் போக்கில் மரக்கறி வகைகளை அதிகூடிய விலைகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
இதனை பொதுமக்கள் விரும்பியோ விரும்பாமலோ அதி கூடிய விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைமைக்கு ஆளாகி வருகின்றனர்.
இதனால், நாளாந்த கூழித்தொழில் செய்து அன்றாட வாழ்க்கையை நடத்திச் செல்லும் பாமர மக்கள் பல கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இவ்வாறானவர்களின் அசௌகரியங்களை தவிர்க்கும் நோக்கில் சகல வசதிகளையும் கொண்ட மரக்கறி வகைகளை மொத்த விற்பனை செய்யும் நிலையத்தையும் களஞ்சியப்படுத்தும் களஞ்சியசாலையையும் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசத்தை மையப்படுத்தியதாக நிந்தவூர் பிரதேசத்தில் அமைப்பதற்கான சகல திட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றோம்.
இதை, ஓர் அரசாங்க வியாபார நிருவனமாக அமைப்பதற்கான முயற்சியை தற்போது மேற்கொண்டு வருவதாகவும் இதன் மூலம் சில குறிப்பிட்ட தனியார் வர்த்தகர்கள் கொள்ளை இலாபம் ஈட்டுவதை தவிர்க்க முடியும் என்றும் இத்திட்டத்தை கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஷாத் பதியுதீனிடம் கையளிக்கவுள்ளதாகவும் அவர் தேரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
7 hours ago