2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

கறவை பசுக்கள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2016 டிசெம்பர் 23 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எஸ்.எம்.முஜாஹித்

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில், நாவிதன்வெளி பிரதேசத்தில்  தெரிவுசெய்யப்பட்ட 13 குடும்பங்களுக்கு, தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான கறவை பசுக்கள், நேற்ற (22) வழங்கி வைக்கப்பட்டன.

மேற்படி பிரதேசத்தில், 1990ஆம் ஆண்டு இடம்பெற்ற யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கே, இவ்வாறு குறவை பசுக்கள் வழங்கப்பட்டன.

நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில், பிரதேச செயலாளர் எஸ்.கரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,   பிரதேச செயலாக கணக்காளர் வை.ஹபீபுள்ளாஹ், நாவிதன்வெளி பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர்; ரீ.மோகனகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--