2021 மார்ச் 04, வியாழக்கிழமை

சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டோர் கைது

Niroshini   / 2015 ஓகஸ்ட் 28 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன்

அக்கரைப்பற்று, கண்ணகிபுரம் பிரதேசத்தில் அனுமதிப்பத்திர நிபந்தனையை மீறி சட்டவிரோதமாக ஆற்று மணல் ஏற்றி சென்ற இருவரை இன்று வெள்ளிக்கிழமை(28) பிற்பகல் அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலையடிவேம்பு கோளாவில் பிரதேசத்தை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கண்ணகிபுரம் நீத்தை ஆற்றில் குறித்த இருவரும் மணல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது அக்கரைப்பற்று பொலிஸ் இரகசிய புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவல்களையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார்  சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .