2020 நவம்பர் 28, சனிக்கிழமை

சட்டவிரோத மின்சாரம் பெற்ற மூவருக்குப் பிணை

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 20 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

நிந்தவூர் மற்றும் சம்மாந்துறைப் பிரதேசங்களில்  வீடுகளுக்கு சட்டவிரோதமாக  மின்சாரம் பெற்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 03 பேரை தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப்பிணைகளில் சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ஏ.எல்.அறூஸ், நேற்று (20) விடுவித்துள்ளார்.

இலங்கை மின்சாரசபையின் தலைமைக் காரியாலய புலனாய்வுப் பிரிவினரும்  பொலிஸாரும் இணைந்து மேற்படி பிரதேசங்களில் திங்க்கட்கிழமை (19) சோதனை மேற்கொண்டனர். இதன்போதே, இம்மூவரின் வீடுகளுக்கும் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றுவந்தமை தெரியவந்தது.

மேலும், இது தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் ஜனவரி; 25ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--