Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 ஜூலை 11 , மு.ப. 03:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அஸ்லம் எஸ்.மௌலானா
சாய்ந்தமருதுக்கு தனியான நகர சபையை உருவாக்குவது தொடர்பில் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சாய்ந்தமருது மத்தியகுழு முக்கியஸ்தர்கள் அடுத்த வாரம் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர் என அக்கட்சியின் பிரதித் தலைவர் ஏ.எம்.ஜெமீல், நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து தேவையேற்படின் ஜனாதிபதி அல்லது பிரதமரைச் சந்திப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்போது, சாய்ந்தமருது நகர சபையை பிரகடனம் செய்வதற்கான காலக்கெடுவை தாம் விதிக்கவுள்ளதுடன், அக்காலப் பகுதிக்குள் அது நிறைவேற்றப்படாவிடின் சத்தியாக்கிரகப் போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
இதற்கான ஒழுங்குகள் கட்சியின் சாய்ந்தமருது மத்திய குழுவினரால்; மேற்கொள்ளப்படுகின்றது. கட்சிப் போராளிகள் அதற்கு தயாராக உள்ளனர். பொதுமக்களும் தம்முடன் அணி திரள்வார்கள் எனவும் அவர் கூறினார்.
மேலும், சாய்ந்தமருது நகர சபையை உருவாக்குவது தொடர்பில் ஏற்கெனவே கிழக்கு மாகாண சபையில் தான் பிரேரணை சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் கூறினார். இது தொடர்பான பிரேரணையை நாடாளுமன்றத்திலும் எமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் ஊடாக கொண்டுசெல்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன' அவர் கூறினார்.
'சாய்ந்தமருதுக்கு தனியான நகர சபையை பிரகடனம் செய்யும் விவகாரம் தொடர்ந்தும் இழுத்தடிக்கப்பட்டு வருவதானது எமது மக்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago