Janu / 2026 மார்ச் 31 , பி.ப. 06:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவில் புதிய வகை கொரோனா விரைவாக உருமாற்றம் பெற்றுப் பரவி வருகிறது. இதற்கு பிஏ.3.2 எனப் பெயரிடப்பட்டுள்ளது. 'சிகாடா' என்றும் அழைக்கப்படும் இந்த வைரஸானது விரைவாகப் பரவி வருவதுடன், விரைவாக உருமாறும் பண்புகளையும் கொண்டுள்ளது. இதனைத் தடுப்பதற்கான முயற்சிகள் உடனடிப் பலனைத் தரவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, நாட்டில் 25 மாகாணங்களில் இதன் பரவல் கண்டறியப்பட்டுள்ளது. இது நாடு முழுவதும் விரைவாகப் பரவி அதிகரித்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024-ம் ஆண்டு இறுதியில் தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த தொற்று, 2025-ம் ஆண்டில் பரவியுள்ளது. 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 2021-ம் ஆண்டு பரவலாக காணப்பட்ட 'ஒமைக்ரான்' வைரஸின் தொடர்ச்சியாக இது உள்ளது. இதன் புரதம் 70 முதல் 75 வகையான உருமாற்றங்களை பெற்றுள்ளது.
இதனால் பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும், இதனால் உடனடியான அச்சுறுத்தல் எதுவும் பெரிய அளவில் இல்லை என மருத்துவர் ஒருவர் கூறுகிறார். ஆனால், தற்போதுள்ள கொரோனா தடுப்பூசிகள் இதற்கு அந்த அளவுக்குப் பெரிய பலனைத் தரவில்லை. ஏனெனில், இவை விரைவாக உருமாற்றம் அடைந்து பல்வேறு வடிவங்களைப் பெற்றுவிடுகின்றன எனக் கூறப்படுகிறது.
2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா பெருந்தொற்று, பின்னர் இந்தியா உட்பட உலக நாடுகள் முழுவதும் பல்வேறு அலைகளாகப் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
9 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago