2021 மே 08, சனிக்கிழமை

தீயணைப்பு பிரிவினருக்கான நிரந்தர நியமனத்துக்கு அனுமதி கோரல்

Suganthini Ratnam   / 2016 ஜூலை 28 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா

கல்முனை மாநகர சபையின்  தீயணைப்பு படைப் பிரிவினருக்கான நிரந்தர நியமனத்துக்கு கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோவிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாக மாநகர ஆணையாளர் ஜெ.லியாகத் அலி தெரிவித்தார்.

மாநகர சபையின் முன்னாள் முதல்வர் நிஸாம் காரியப்பரின் முயற்சியால், 2014ஆம் ஆண்டு கல்முனை மாநகர சபைக்கான தீயணைப்பு படைப்பிரிவு உருவாக்கப்பட்டது. இதில் கடமையாற்றுவதற்காக மாநகர சபையால் 13 பேருக்கு தற்காலிக நியமனங்கள்; வழங்கப்பட்டன.

தீயணைப்பு படைப் பிரிவினருடனான கலந்துரையாடல், மாநகர சபையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், 'தீயணைப்பு படைப் பிரிவினர் ஏனைய ஊழியர்கள் போலன்றி எவ்வேளையிலும் தயார் நிலையில் இருக்கவேண்டும்.

மேலும், தீயணைப்பு படைப் பிரிவினர் வாகனங்களை செலுத்தக் கூடியவர்களாக இருப்பதுடன், கனரக வாகன அனுமதிபத்திரமும் வைத்திருக்க வேண்டும்' என்றார்.  

'மேலும், 13 பேரின் நிரந்தர நியமனங்களுக்காக முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் நிஸாம் காரியப்பரின் வேண்டுகோளுக்கமைய இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.  இந்நியமனங்களை வழங்கும் பொருட்டு ஆளுநரிடம் ஆளணி அங்கிகாரம் கோரப்பட்டுள்ளது. அவரது அனுமதி கிடைத்ததும் மாகாண சபையினால் நிரந்தர நியமனம் வழங்கப்படும்' எனவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X