2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

பொதுக்கூட்டம்

Niroshini   / 2016 மார்ச் 31 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா

அரச சேவை ஓய்வூதியர் நம்பிக்கை நிதியத்தின் சாய்ந்தமருது பிரதேச செயலகக் கிளையின் வருடாந்த பொதுக் கூட்டம், சனிக்கிழமை(02) காலை 8.45 மணிக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

அமைப்பின் தலைவரும் முன்னாள் கோட்டக் கல்விப் பணிப்பாளருமான எம்.ஐ.அப்துல் ஜப்பார் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.

நிகழ்வின் ஓர் அங்கமாக சாய்ந்தமருது சிரேஷ்ட பிரஜைகள் ஒன்றியத்தின் தலைவர் டொக்டர் எம்.ஐ.எம்.ஜெமீலின் ஐம்பது வருட வைத்திய சேவையை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்ச்சியும் இடம்பெறவுள்ளது.

அத்துடன் மரணமடைந்த உறுப்பினர்களுக்கான துஆப் பிரார்த்தனை மற்றும் புதிய உத்தியோகத்தர்கள் தெரிவும் இதன்போது இடம்பெறவுள்ளதாக அமைப்பின் செயலாளர் ஏ.எல்.மீராலெப்பை தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .