2021 மார்ச் 08, திங்கட்கிழமை

மனைவி கொலை; கணவன் கைது

Editorial   / 2017 ஜூலை 15 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராஜன் ஹரன், கனகராசா சரவணன்

திருக்கோவில் முனையக்காடு பகுதியில் மனைவியை கொலைசெய்த குற்றச்சாட்டில் நபரொருவர், இன்று காலை 9 மணியளவில் கைதுசெய்யப்பட்டுள்ளாரென, திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

குடும்பத்தில் மற்றுமொரு பெண்ணின் தலையீடு காரணமாக ஏற்பட்ட குடும்பத்தகராறில், மனைவி மீது கணவன் தாக்குதல் நடத்தியுள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.

மனைவியின் தலையில் தாக்குதலை மேற்கொண்டதையடுத்து ஸ்தலத்திலேயே மனைவி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில், ஒரு பிள்ளையின் தாயான 40 வயதுடைய இளையதம்பி யோகேஸ்வரி என்பவரே உயிரிழந்துள்ளார் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை, திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .