2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

நடைபாதைகளிலிருந்து வியாபாரப் பொருட்களை அகற்ற நடவடிக்கை

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 20 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

கல்முனை பிரதேசத்தில் பிரதான வீதியின் இருமருங்கிலுமுள்ள  நடைபாதைகளில் அங்காடி வியாபாரப் பொர்ட்கள், கட்டிட நிர்மாண பொருட்களை அடுக்கி வைத்திருப்போரை அவற்றை நடைபாதையில் இருந்து அகற்றுமாறு கல்முனை பொலிஸார் அறிவித்துள்ளனர்.

கடந்த இரு தினங்களாக கல்முனை பொலிஸாரும் காரைதீவு விஷேட அதிரடிப்படை வீரர்களும் இணைந்து மாளிகைக்காடு , சாய்ந்தமருது மற்றும் கல்முனை ஆகிய பிரதேசங்களில் நடைபாதையிலுள்ள பொருட்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மூலம் தற்போது பிரதான வீதி செப்பனிடப்பட்டதன் பின்னர் இவ் வீதியினால்  பயணிக்கும் உள்ளுர் மற்றும் வெளியூர்களைச் சேர்ந்த வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து காணப்படுகின்றது.

பிரதான வீதியின் இருமருங்கிலும் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதனாலும் நடைபாதையை வியாபாரிகள் ஆக்கிரமித்து இருப்பதனாலும் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதனை கருத்திற் கொண்டே மேற்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--