Menaka Mookandi / 2010 நவம்பர் 18 , மு.ப. 05:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
லண்டனில் அமைந்துள்ள தொடர்மாடி கட்டிடமொன்றில் அண்மையில் இடம்பெற்ற தீவிபத்தில் சிக்குண்டு உயிரிழந்தவர்களில் சாய்ந்தமருதைச் சேர்ந்த இளைஞரொருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ்.வீதியைச் சேர்ந்த 30 வயதுடைய அப்துல் அஸீஸ் பௌசுல் இஹ்ஸான் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை லண்டனில் மேற்படி இளைஞன் தங்கியிருந்த தொடர்மாடிக் கட்டிடத்தில் ஏற்பட்ட மின் ஒழுக்கின் காரணமாக 2ஆம் மாடியில் உறங்கிக் கொண்டிருக்கும் மேற்படி இளைஞர் மூச்சுத் திணரலுக்குள்ளாகி உயிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, உயிரிழந்தவரின் சகோதரியும் குடும்பத்தாரும் குறித்த கட்டிடத்தின் கீழ் மாடியில் குடியிருந்த நிலையில் தீக் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிழந்தவரின் ஜனாசா நேற்று லண்டனில் வசிக்கும் கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்த பலரின் முன்னிலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இவருக்கான ஜனாசாத் தொழுகை நாளை வெள்ளிக்கிழமை சாய்ந்தமருது ஜும் ஆ பள்ளிவாசலில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
21 minute ago
31 minute ago
32 minute ago
36 minute ago
Ahamed Thursday, 18 November 2010 08:51 PM
இந்த சம்பவத்தில் ஒருத்தர் மாத்திரமே பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர், அவரின் சகோதரியோ, வேறு யாருமோ எந்தவிதத்திலும் பாதிக்கப்படவில்லை யாருமோ வைத்தியசாலையில் அனுமதிக்கபடவில்லை, இந்த சம்பவம் ஞாயற்று கிழமை அல்ல வெள்ளி கிழமை மாலையே ஏற்பட்டது.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
31 minute ago
32 minute ago
36 minute ago