Freelancer / 2026 ஏப்ரல் 16 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈரானுக்கு சீனா இராணுவ உதவி செய்வதாக ஊடகங்களில் தகவல் வெளியான நிலையில், அதை சீனா திட்டவட்டமாக மறுத்துள்ளது.
கடந்த மார்ச் 28 ஆம் திகதி, ஈரான் மீது இஸ்ரேல் - அமெரிக்கா இணைந்து தாக்குதலை தொடங்கின. ஒரு மாத காலத்துக்குப் பின்னர் 2 வார தற்காலிக போர் நிறுத்தம் அமுலில் இருக்கிறது.
இந்தச் சூழலில், ஈரானுக்கு சீனா ராணுவ உதவி செய்வதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. அந்தத் தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ளது சீனா. கூடவே, அதன் அடிப்படையில் அமெரிக்கா வரி விதிப்பில் ஈடுபடுமானால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக, சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில்,
ஈரானுக்கு சீனா இராணுவ ரீதியிலான உதவிகளைச் செய்வதாக பல்வேறு ஊடகங்களிலும் தகவல் வெளியாகியுள்ளன. அந்தத் தகவல்களை அனைத்தும் சித்தரிக்கப்பட்டவை. இதன் அடிப்படையில், சீனா மீதான வரிகளை அமெரிக்கா அதிகப்படுத்தினால், சீனா தக்க பதிலடியைத் தரும் என்று குறிப்பிட்டுள்ளார். (a)
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago