2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

அம்பாறையில் குளங்கள் புனரமைக்கும் வேலைத்திட்டம்

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 27 , மு.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார்)

அம்பாறை மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட குளங்கள் மற்றும் உட்புற வீதிகளை புனரமைக்கும் வேலைத்திட்டம் நேற்று சனிக்கிழமை அம்பாறை பதியத்தலாவ மிரிஸ்வத்த ஹவனகண்டியவில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவால் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.


இந்நிகழ்வில் சிரேஷ்ட அமைச்சர் பீ.தயாரட்ன, கமநல அபிவிருத்தி மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன், திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண அமைச்சர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.


பொருளாதார அபிவிருத்தி அமைச்சுடன், கமநல அபிவிருத்தி மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சும் இணைந்து மேற்கொள்ளவிருக்கும் கைவிடப்பட்ட 2000 குளங்கள் புனர்நிர்மாண வேலைத்திட்டங்களுக்கு மேலதிகமாக இத்திட்டம் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--