2021 மே 12, புதன்கிழமை

இளைஞர் நிலைமாற்றத் திட்டத்தின் கீழ் அக்கரைப்பற்றில் தொழிற்பயிற்சி

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 28 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

அம்பாறை மாவட்ட சமூக நல்வாழ்வு அமைப்பு யுனிசெப் நிறுவனத்தின் அனுசரணையுடன் இளைஞர் நிலைமாற்றத் திட்டத்தின் கீழ் மூவினங்களைச் சேர்ந்த 250 இளைஞர் யுவதிகளுக்கு தொழில் பயிற்சி திட்டத்தில் தையல் பயிற்சி மற்றும் சாரதிபயிற்சியை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ்களும் தொழில் உபகரணங்களும் வழங்கும் நிகழ்வு நேற்று செல்வாய்க்கிழமை அக்கரைப்பற்று சமூக நலவாழ்வு தலைமை காரியாலயத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அதிதிகளாக யுனிசெப் நிறுவனத்தின் திட்ட அதிகாரி எஸ்.நிர்மலன், ஹட்டன் நஷ்னல் வங்கி அக்கரைப்பற்று கிளை அதிகாரி ஜனரஞ்சன், மக்கள் வங்கி அக்கரைப்பற்று அதிகாரி முஸ்தப்பா, சமூக நலவாழ்வு அமைப்பின் திட்டப்பணிப்பாளர் பிறேமலதன், அமைப்பின் நிருவாக அதிகாரி பரமசிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு சான்றிதழ்களையும்; தொழில் உபகரணங்களையும் வழங்கிவைத்துள்ளதுடன் கலந்த கொண்ட அதிதிகள் உற்பத்தி செய்த ஆடைகளை பார்வையிடுவதையும் படங்களில் காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .