2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

சேவகப்பற்று பிரதேச இணைப்புக் குழுக்கூட்டம்

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 18 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.ஜே.எம்.ஹனீபா)

சுவட் அமைப்பின் ஏற்பாட்டில் லூதர் உலக நிவாரண அமைப்பின் அனுசரணையுடன் சம்மாந்துறை பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட மல்வத்தை, சேவகப்பற்று விவசாய அமைப்பின் பிரதி நிதிகளுக்கான பொருளாதார மேம்பாட்டு செயற்திட்ட பிரதேச இணைப்புக் குழுக் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சம்மமாந்துறை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஹம்சார், சுவட் அமைப்பின் திட்ட இணைப்பாளர் கே. சுகந்தன், விவசாய பொதனாசிரியர்களான ஏ.மஜீட், எஸ்.எல்.றசீம், பொறியியல் உதவியாளர் எஸ்.மனோகரன், சுவட் அமைப்பின் வெளிக்கள உத்தியோகத்தர் ஆனந்தராஜா, விவசாய உத்தியோகத்தர் எஸ்.சயரூபன், கலாநிதி ஐ.எம்.இப்றாஹீம்; உட்பட விவசாய அமைப்பின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் இவ்வைபவத்தில் விவசாய அமைப்புக்களுக்கு காரியாலய உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--