2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

திரிய பியச வீடு கையளிக்கும் நிகழ்வு

Kogilavani   / 2014 ஏப்ரல் 11 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.ஜே.எம்.ஹனீபா


அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு பிரதேச செயலகப்பிரிவுக்கட்பட்ட மாளிகைகாட்டை சேர்ந்த வருமானம் குறைந்த குடுப்பமொன்றுக்கு திரிய பியச வீடு கையளிக்கும் நிகழ்வு வியாழக்கிழமை (10) பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரதேச அபிவிருத்திக்குழுவின் தலைவருமான பீ.எச் பியசேன, அம்பாறை மாவட்ட சமுர்த்தி உதவி ஆணையாளர் யூ.பி.எஸ்.அனுறுத்த பியதாச, மாவட்ட சமுர்த்தி இணைப்பாளர் ஐ.அலியார் உட்பட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது,   மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரதேச அபிவிருத்திக்குழுவின் தலைவருமான பீ.எச்பியசேனவினால் இந்த வீடு திறந்து வைக்கப்பட்டதுடன் வீட்டின் உரிமையாளருக்கு வீட்டின் சாவியினையும் அத்துடன் அல்குர்ஆன் பிரதியினையும் வழங்கிவைத்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .