2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

முச்சக்கரவண்டி தீக்கிரை

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 18 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கனகராசா சரவணன்


சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவரின் முச்சக்கரவண்டி இனந்தெரியாதோரினால் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு பிரதேசத்தில்  இடம்பெற்றதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர். 

இவரது வீட்டு முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியே தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

இவர் முச்சக்கரவண்டியை நிறுத்திவைத்து விட்டு, உறக்கத்திற்குச் சென்றுள்ளார். இந்நிலையில், வியாழக்கிழமை (17) நள்ளிரவு வேளையில் திடீரென   வெளிச்சத்தைக் கண்டு  கதவைத் திறந்து பார்த்தபோது,  முச்சக்கரவண்டி தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தது.  அத்துடன், வீட்டு மதிலால் இருவர் ஏறி தப்பியோடுவதையும் இவர் கண்டுள்ளார்.

எரிந்துகொண்டிருந்த முச்சக்கரவண்டிக்கு தண்ணீர்  ஊற்றி தீ அணைக்கப்பட்டது.  இருப்பினும், முச்சக்கரவண்டி எரிந்து நாசமாகியுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--