2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

அம்பாறையில் 422,958 பேர் பாதிப்பு

Super User   / 2011 ஜனவரி 12 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார், எஸ்.மாறன், எம்.எம்.ஜெஸ்மின், ஹனீக் அஹமட்)

அம்பாறை மாவட்டத்தில் பெய்துவரும் அடை மழை காரணமாக மாவட்டத்தின் 20 பிரதேச செயலக பிரிவிலும் 109,568 குடும்பங்களைச் சேர்ந்த 422,958 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கர தெரிவித்தார்.

இவர்கள் அனைவரும் 83 நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, அம்பாறை மாவட்டத்தின் பல வீதிகளை ஊடறுத்து 4 அடி உயரத்திற்கு வெள்ளம் பாய்வதனால் போக்குவரத்துக்களும் பாதிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் பெய்து வரும் இடைவிடாத மழையினால் சுமார் 20,000 ஏக்கர் வயல் நிலங்கள் முற்றாக நீரில் மூழ்கியுள்ளன.

தற்போது நெற்பயிர்கள் அனைத்தும் குடலைப் பருவத்தில் உள்ளதால் இந்ந வெள்ள நிலைமை நீடிக்கும் பட்சத்தில் அனைத்து நெற்பயிர்களும் அழிவடைவதுடன் விவசாயிகள் பாரிய நஷ்டத்தை எதிர்நோக்கவேண்டிவரும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X