Editorial / 2020 மார்ச் 25 , பி.ப. 05:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான்
கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தும் போது அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் எவ்வாறு ஒத்துழைப்பு வழங்குவது என்ற கலந்துரையாடல் கல்முனை மாநகர சபை கேட்போர் கூடத்தில், இன்று (25) நடைபெற்றது.
இதன்போது, வெளிநாடுகளில் இருந்து வந்து. கல்முனை பிராந்தியத்தில் முடங்கியுள்ள வெளிநாட்டவர்கள், பிரதேசவாசிகள் தொடர்பாக விவரங்களை சேகரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வெளிநாடுகளில் இருந்து அண்மையில் கல்முனை பிரதேசத்துக்கு வருகை தந்த 145 பேரையும் விசேட கண்காணிப்பில் வைக்கவும் இதன்போது தீர்மானம் எடுக்கப்பட்டது.
மேலதிக விடயங்கள் தொடர்பில், விசேடமாக கல்முனை மாநகர சபையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தகவல் மத்திய நிலையத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
43 minute ago
48 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
48 minute ago
4 hours ago