2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

கழிவுநீர் தொட்டியில் இருந்து சிசுவின் சடலம் மீட்பு

Editorial   / 2026 ஏப்ரல் 13 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பொலன்னறுவை போதனா வைத்தியசாலையின் கழிவுநீர் சுத்திகரிப்புத் தொட்டியொன்றிலிருந்து இன்று (13) சிசு ஒன்றின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலன்னறுவை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 வைத்தியசாலை ஊழியர் ஒருவர் கழிவுநீர் தொட்டியில் சிசுவின் சடலம் இருப்பதைக் கண்டு அதிகாரிகளுக்குத் தகவல் வழங்கியுள்ளார். இது தொடர்பான நீதவான் விசாரணைகள் இன்று மாலை முன்னெடுக்கப்படவுள்ளதாக பொළொன்னறுவை தலைமையக பொலிஸ் பரிசோதகர் கே.பி.பி. பத்திரண தெரிவித்தார்.

 இந்தச் சிசு யாருடையது என்பது குறித்த எந்தத் தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை. இச்சம்பவம் குறித்து பொலன்னறுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .