2021 மார்ச் 03, புதன்கிழமை

ஒரு இலட்சம் கிலோமீட்டரில் பொத்துவில் 4 வீதிகள் உள்ளடக்கம்

Princiya Dixci   / 2021 ஜனவரி 18 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கொள்கைத் திட்டமிடலுக்கமைய, நாட்டில் ஒரு இலட்சம் கிலோமீட்டர் வீதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ், பொத்துவில் பிரதேச சபைக்குட்பட்ட நான்கு வீதிகள் காபட் வீதிகளாக, 07 கோடி ரூபாய் செலவில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக, பொதுஜன பெரமுனக் கட்சியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளர் எம்.ஏ.அப்துல் மஜீட் தெரிவித்தார்.

இதன்படி, இப்பிராந்திய விவசாயிகளும் பொதுமக்களும் தொடர்ச்சியாக விடுத்த வேண்டுகோளுக்கிணங்க ஜலால்டீன் சதுக்க வீதி, மதுரங்சேனை வீதி, 20 வீட்டுத்திட்ட வீதி, சிங்கபுர ஆகிய வீதிகள் 04 கிலோமீற்றர் காபட் வீதியாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இவ்வீதிகளின் அபிவிருத்திப் பணிகள் மிக விரைவில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .