Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2021 ஜனவரி 25, திங்கட்கிழமை
Menaka Mookandi / 2010 நவம்பர் 18 , பி.ப. 12:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கே.எஸ்.வதனகுமார்)
அம்பாறை மாவட்ட, நாவிதன்வெளி பிரதேச தமிழரசுக் கட்சிக் கிளை நேற்று அங்குராப்பணம் செய்யப்பட்டது. தமிழரசுக் கட்சியின் உப தலைவர்களான பொன். செல்வராசா, டாக்டர் தோமஸ் வில்லியம் தங்கத்துரை ஆகியோரினால் அங்குராப்பணம செய்யப்பட்டது.
தமிழரசுக் கட்சியின் நாவிதன்வெளிக் கிளைத் தலைவராக நாவிதன்வெளிப் பிரதேச சபை தவிசாளர் த.கலையரசன் தெரிவு செய்யப்பட்டதுடன் செயலாளராக உப தவிசாளர் எஸ்.குணரெட்ணம் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் 20 பேர் கொண்ட நிருபாக சபையும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் டாக்டர் எஸ்.ஏ.தமிழ்நேசன் மற்றும் சிரேஷ்ட அரசியல்வாதி பிரசன்னா இந்திரகுமார்,காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கே.ஜீவராசா ஆகியோர் கலந்துகொண்டனர்.
இங்கு பொன்.செல்வராசா உரையாற்றுகையில், 'நடைபெறவிருக்கும் உள்ளுராட்சி சபை தேர்தலில் பங்கு பற்றி பிரதேச சபைகளை கைப்பற்றுவதனூடாக இளைஞர்கள் பிரதேச அரசியல் தலைமையை பொறுப்பேற்பதனூடாக தமிழரசுக் கட்சியின் தலைமையை பொறுப்பேற்று நடத்துவதற்கான ஆளுமையை பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் இளைஞர்களுக்கு அதற்கான அத்திவாரத்தை நடைபெறவிருக்கும் உள்ளுராட்சி மன்ற தேர்தல் அடிகோலும்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago