2026 ஏப்ரல் 18, சனிக்கிழமை

கால்வாயில் விழுந்த யானை மீட்பு: ஆவேசமடைந்து வாகனங்களை பந்தாடியது

Editorial   / 2026 ஏப்ரல் 18 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாதுரு ஓயா 'ZD' கால்வாயில் தவறி விழுந்த காட்டு யானை ஒன்றை மீட்கும் நடவடிக்கையின் போது, அந்த யானை வனவிலங்கு பாதுகாப்புத் துறையினரின் வாகனங்களைத் தாக்கி சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரலகங்வில – பிம்புரத்தாவ பகுதியிலிருந்து இன்று (17) அதிகாலை குறித்த யானை கால்வாய்க்குள் விழுந்துள்ளது. இது குறித்துத் தகவலறிந்த வனவிலங்கு பாதுகாப்புத் துறையினர், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மடகம பகுதியில் வைத்து யானையைப் பாதுகாப்பாகக் கரைக்கு மீட்டெடுத்தனர். எனினும், நிலத்திற்கு வந்தவுடன் கடும் ஆவேசமடைந்த அந்த யானை, அங்கிருந்த அதிகாரிகளைத் துரத்தியதோடு, நிறுத்தப்பட்டிருந்த ஒரு வனவிலங்கு பாதுகாப்புத் துறைக்குச் சொந்தமான கேப் (Cab) வாகனம் மற்றும் நான்கு மோட்டார் சைக்கிள்களைத் தாக்கி பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. தாக்குதலையடுத்து அந்த யானை அங்கிருந்து தப்பி காட்டுப்பகுதிக்குள் சென்றுள்ளது. இச்சம்பவத்தில் அதிகாரிகளுக்குக் காயம் ஏதும் ஏற்படாத போதிலும், வாகனங்களுக்குக் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. வனவிலங்கு மீட்பு நடவடிக்கைகளின் போது இவ்வாறான அபாயகரமான சூழல்கள் ஏற்படுவது குறித்து அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .