2020 நவம்பர் 25, புதன்கிழமை

அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்வு

Kogilavani   / 2011 ஒக்டோபர் 05 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

தேசிய சுகாதார வாரத்தினையொட்டி, அட்டாளைச்சேனை பிரதேச வைத்திய அதிகாரிகள் இன்று புதன்கிழமை அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்வொன்றை நடத்தினர்.

இதன்போது, பாடசாலை மாணவர்களுக்கு டெங்கு நோய் தொடர்பான விளக்கங்களினையும், அந்நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் வைத்தியர்கள் விளக்கமளித்தனர்.

இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர்களான உறுஜா பானு நிஹால் மற்றும் எம்.ஐ.எம். றஹீம், பாடசாலை அதிபர் எம்.ஐ.எம். அப்துல் சலாம், ஆசிரியர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
                                                                                                                                                                                                                                                                                                 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .