2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

பாலமுனை கிராமத்தில் மீன்பிடி படகு தயாரிக்கும் தொழிற்சாலை

Kogilavani   / 2013 ஒக்டோபர் 16 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.கே.றஹ்மத்துல்லா


அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேசசெயலகப் பிரிவின் பாலமுனை கிராமத்தில் மீன்பிடி படகு தயாரிக்கும் தொழிற்சாலையொன்று நிறுவப்பட்டு வருகின்றது.

ஒலுவில் மீன்பிடி துறைமுகம் அண்மையில் திறந்து வைக்கப்பட்டுள்ளதனை  தொடர்ந்து பாலமுனையில் இவ்வாறான மீன்பிடி படகு தயாரிக்கும் தொழிற்சாலையினை தனியார் நிறுவனம் ஒன்று மேற்கொண்டு வருகின்றது.

சர்வதேச தரத்தில் உற்பத்தி செய்யக் கூடிய இத்தொழிற்சாலையின் மூலம் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இதற்கான சந்தை வாய்ப்பினை பெற்றுக்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இத்தொழிற்சாலையினை எச்.இ.சி என்றழைக்கப்படும் படகு உற்பத்தி தனியார் நிறுவனமொன்று 134 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணித்து வருகின்றது.

தொழிற்சாலையின் கட்டுமான பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--