Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 நவம்பர் 09 , மு.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
தலைமை நீதிபதி தீர்ப்பை வாசித்து வருகிறார். தீர்ப்பில் அவர் கூறியதாவது:
பாபர் மசூதி மிர்பாகியால் கட்டப்பட்டது
இறையியல் விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடுவது சரியானதல்ல
ஒரு பிரிவினரின் நம்பிக்கையை மறு பிரிவினர் மறுக்க முடியாது
மசூதியில் 1949-ம் ஆண்டில் சிலைகள் வைக்கப்பட்டன.
மதச்சார்பின்மையே அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை ; அதன்படியே உச்சநீதிமன்றம் அமைக்கப்பட்டது
தொல்லியல் துறை ஆதாரங்களை புறக்கணிக்க முடியாது
தொல்லியல் துறை ஆதாரங்கள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவை
அயோத்தியில் காலியிடத்தில் பாபர் மசூதி கட்டப்படவில்லை. பாபர் மசூதியில் அடித்தளத்தில் இருக்கும் அமைப்பு இஸ்லாமிய முறைப்படி கட்டப்படவில்லை
10:38 am
அயோத்தி வழக்கில் 5 நீதிபதிகளும் ஒரே தீர்ப்பை எழுதியுள்ளனர். முழுமையான தீர்ப்பை படித்து முடிக்க 30 நிமிடங்கள் ஆகும்
10:38 am
ஷியா வக்ஃபு வாரிய மனுக்களை தள்ளுபடி செய்தனர் நீதிபதிகள்
10:31 am
அயோத்தி வழக்கில் நீதிபதிகள் தீர்ப்பை வாசித்து வருகின்றனர்.
அயோத்தி வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. தீர்ப்பை அடுத்து இந்தியா முழுக்க பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
10:09 am
அயோத்தி தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில் நாட்டின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை.
10:07 am
அயோத்தி வழக்கில் தீர்ப்பை வாசிக்க உச்சநீதிமன்றத்துக்கு வந்தார் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்.
எஸ்.ஏ.போப்டே, அப்துல் நசீர், அசோக் பூஷன், சந்திர சூட் ஆகியோரும் வருகை
உச்ச நீதிமன்ற வளாகத்தில் 144 தடை உத்தரவும் பிறபிக்கப்பட்டுள்ளது
10:05 am
அயோத்தி தீர்ப்பு - சமூக வலைதளங்களை கண்காணிக்க தமிழக பொலிஸார் தீர்மானம்
9:19 am
தீர்ப்பை அனைத்துத் தரப்பினரும் மதித்து அமைதி காக்க வேண்டும்: தமிழ் முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்
8:45 am (IST)
தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
8:43 am (IST)
அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாவதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை யாதவ கல்லூரிக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
7:58 am (IST)
அயோத்தி தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு வழங்கப்படும் பாதுகாப்பு இசட் பிளஸாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அயோத்தி வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று இந்திய உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
1992ல் பாபர் மசூதி ஆர்எஸ்எஸ் கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. அயோத்தியில் பாபர் மசூதி இருந்து பிடிக்கப்பட்ட இடமான 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்று பிரச்சினைதான் இந்த முக்கிய வழக்கிற்கு காரணம் ஆகும்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், அப்துல் நசீர், அசோக் பூஷன், போப்டி ஆகியோர் இந்த வழக்கை விசாரித்து வந்தனர்.
23 minute ago
50 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
50 minute ago
1 hours ago
3 hours ago