2020 ஏப்ரல் 05, ஞாயிற்றுக்கிழமை

பிரதமர் மோடியின் முடக்க முடிவுக்கு காங்கிரஸ் ஆதரவு

Editorial   / 2020 மார்ச் 25 , பி.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுடெல்லி

கொவிட்-19ஐ கட்டுப்படுத்தும் நோக்கில், நாடுமுழுவதும் 21-நாள்கள் முடக்கம் செய்யப்படும் எனப் பிரதமர் மோடி நேற்று அறிவித்த முடிவுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவும், வரவேற்பும் தெரிவித்துள்ளது.

அதேசமயம், சமூகத்தில் விளிம்பு நிலையில் இருக்கும் தொழிலாளர்கள், ஏழை மக்கள், கூலித்தொழிலாளர்கள் நலனுக்கு திட்டங்களை, நிதியுதவியை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

  “ அடுத்த 21 நாள்களுக்கு நாடுமுழுவதும் முடக்கப்பட்டுள்ளது. இதற்கு மக்கள் அனைவரும் ஆதரவு அளி்க்க வேண்டும்” எனவும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

பிரதமர் மோடியின் இந்த வேண்டுகோளுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவும்,வரவேற்பும் அளித்துள்ளது. அந்த கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ எந்த விதமான சிரமங்கள்

இருந்தபோதிலும், பிரதமர் மோடியின் முடிவை ஆதரித்து, கட்டுப்பாடுகளை பின்பற்றுவதுதான் அனைத்துக் குடிமக்க ளின் கடமை. பிரதமர் மோடியின் உரையை மிகவும் கவனமாகக் கேட்டேன்.

அவரின் பேச்சில் மக்கள் மீதான அக்கறை, உணர்ச்சி, அழுத்தம், கவலை, அச்சம் போன்ற அனைத்து உணர்வுகளும் கலந்திருந்தன.

அதேசமயம், சமூகத்தில் உள்ள விளிம்புநிலையில் இருக்கும் ஏழைகள், தினக்கூலிகள், வேளாண் தொழிலாளர்கள், சுயதொழில் செய்வோர் ஆகியோருக்கு நிதியுதவி அளிக்கும் திட்டங்களை மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.

நிதித்திட்டங்களை அறிவித்துவிட்டால் மற்ற துறைகளில் இருக்கும் சிக்கல்களும் தெரி்ந்துவிடும், அதையும் நாம் அடையாளம் கண்டு தீர்க்க முடியும்” எனத் தெரிவித்தார்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .