Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 பெப்ரவரி 02 , பி.ப. 02:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய பலன்கள் (02.02.2015)
மேடம்
ஆரோக்கிய விடயத்தில் கவனம் தேவை. யோகா மற்றும் நடை பயிற்ச்சி பிரச்சினையைக் குறைக்கும். குடும்பத்து பெரியவர்களிடம் மனம் விட்டு பேசி, ஆசிர்வாதம் பெறுவீர்கள். புதிய தொடர்புகளால் ஆதாயம் கூடும்.
அஸ்வினி : துன்பம்
பரணி : கஷ்டம்
கிருத்திகை 1ஆம் பாதம்: மகிழ்ச்சி
இடபம்
விரும்பிய பணவரவு ஒன்றுக்கும் வாய்ப்பு உண்டு. பொழுதுபோக்கில் அதிக நாட்டம் கொள்வீர். நீண்ட நாள் செய்ய விரும்பிய காரியம் ஒன்றை செய்து முடிப்பீர்கள்.
கிருத்திகை 2, 3, 4: மகிழ்ச்சி
ரோகிணி : இன்பம்
மிருகசீரிடம் 1, 2: வெற்றி
மிதுனம்
இன்று வழக்கத்தை விட வேலைப்பளு கூடும். குடும்பத்தில் காரணமற்ற வகையில் கோபதாபங்களை வெளிப்படுத்துவீர்கள். உடலில் அசதி சோர்வு ஆட்கொள்ளும்.
மிருகசீரிடம் 2, 3: துக்கம்
திருவாதிரை: துன்பம்
புனர்பூசம்: சோர்வு
கடகம்
புதிய அறிமுகங்கள் பயனுள்ளதாக இருக்கும். முக்கியஸ்தர்களின் சந்திப்பு பயனுள்ளதாக இருக்கும். சுப காரிய விடயங்களில் முன்னேற்றம் காணப்படும்.
புனர்பூசம்: மகிழ்ச்சி
பூசம் : தனலாபம்
ஆயில்யம்: மகிழ்ச்சி
சிம்மம்
தொழில்மாற்றம் பற்றிய சிந்தனைகள் கூடுதலாக இருக்கும். சுகமான, சந்தோஷமான அனுபவங்களைச் சந்திக்கும் நாள். பெற்றோரின் கருத்துக்கள் யோசிக்க வைக்கும்.
மகம்: வெற்றி
பூரம்: மகிழ்ச்சி
உத்திரம் 1ஆம் பாதம்: இன்பம்
கன்னி
நெருங்கிய நண்பர் கேட்ட பண உதவி ஒன்றை செய்து முடிப்பீர்கள். குடும்பத்துடன் தெய்வ ஸ்தல வழிபாடு அமையும். இல்லறத் துணையின் கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள்.
உத்திரம் 2, 3, 4: மகிழ்ச்சி
அஸ்தம்: தனலாபம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: இன்பம்
துலாம்
எதையும் யோசித்து நிதானமாக செயல்பட வேண்டும். பேச்சில் மென்மை இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். உறவினர் ஒருவரின் வருகை குடும்ப சூழலை மாற்றி அமைக்கும்.
சித்திரை 3, 4ஆம் பாதம் : துக்கம்
சுவாதி : துன்பம்
விசாகம் 1, 2, 3: கவனம்
விருட்சிகம்
சுகமான, சந்தோஷமான அனுபவங்களை சந்திக்கும் நாள். ஆடம்பர பொருட்கள் மீது அதிக நாட்டம் உண்டாகும். தொழில் போட்டிகளுக்கு தீர்வு காண்பீர்கள்.
விசாகம் 4: மகிழ்ச்சி
அனுசம்: முன்னேற்றம்
கேட்டை: லாபம்
தனுசு
சிறுகடன் தொந்தரவு கொடுக்கும். பெற்றோரின் கருத்துக்கள் யோசிக்க வைக்கும். விரும்பிய பணவரவு ஒன்றுக்கும் வாய்ப்புகள் உண்டாகும்.
மூலம்: துன்பம்
பூராடம்: பயம்
உத்திராடம் 1ஆம் பாதம்: லாபம்
மகரம்
தெய்வ வழிபாடு மன நிறைவு தரும். சுப காரிய விடயங்களில் முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்த்த பணவரவுகளின் மூலம் தங்களது திட்டங்களை நிறைவேற்ற ஏதுவாக இருக்கும்.
உத்திராடம் 2, 3, 4: தனலாபம்
திருவோணம்: வெற்றி
அவிட்டம் 1, 2 : இன்பம்
கும்பம்
குடும்பத்தில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு விலகும். வேலையாட்களிடம் மென்மையான போக்கை கடைப்பிடித்தால் அவர்களின் பூரண ஒத்துழைப்பு கிடைக்கப்பெறுவீர்கள். பணியில் இருப்பவர்களுக்கு புது பொறுப்புகளும் மாற்றங்களும் ஏற்படும்.
அவிட்டம் 3, 4: மகிழ்ச்சி
சதயம் : கவனம்
பூரட்டாதி 1, 2, 3: இன்பம்
மீனம்
போட்டிகளை எளிதில் சமாளிப்பீர்கள். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். உடன் பிறப்புக்களால் அனுகூலம் உண்டாகும்.
பூரட்டாதி 4: இன்பம்
உத்திரட்டாதி : லாபங்கள்
ரேவதி : முன்னேற்றம்
7 minute ago
17 minute ago
30 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
17 minute ago
30 minute ago
43 minute ago