Shanmugan Murugavel / 2015 ஒக்டோபர் 07 , மு.ப. 08:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
இஸ்ரேலுடன் வன்முறை அதிகரிப்பைத் தவிர்க்க விரும்பியதாக, பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூட் அப்பாஸ் தெரிவித்துள்ளார். அண்மைய நாட்களாக அதிகரித்துள்ள வன்முறை நிலைமையைத் தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள முதலாவது நேரடிக் கருத்தாக இது அமைந்துள்ளது.
'இஸ்ரேலுடன் இராணுவ மற்றும் பாதுகாப்பு நெருக்கடி நிலை எமக்கு வேண்டாம். எங்களுடைய பாதுகாப்புப் படைகளுக்கும் அரசியல் இயக்கங்களுக்கும், உமக்கு வன்முறை உயர்தல் வேண்டாமெனவும், எம்மைப் பாதுகாக்கவே வேண்டுமெனவும் தெரிவித்து வருகிறோம்" என அவர் தெரவித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமையிலிருந்து இடம்பெற்றுவரும் மோதல்கள் காரணமாக, குறைந்தது 499 பலஸ்தீனர்கள் காயமடைந்துள்ள நிலையிலேயே, அவரது இக்கருத்து வெளியாகியுள்ளது.
மேற்குக் கரையிலும் ஜெருசலேத்தின் பழைய நகரிலும் ஏற்பட்ட வன்முறையான நிலையைத் தொடர்ந்து, பழைய நகருக்கு பலஸ்தீனர்கள் செல்வதற்கு இஸ்ரேலியப் படையினர் தடை விதித்ததைத் தொடர்ந்து, வன்முறை மேலும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
8 hours ago
8 hours ago
12 Nov 2025
12 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
12 Nov 2025
12 Nov 2025