Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 நவம்பர் 14 , பி.ப. 05:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி றொட்றிகோ டுட்டர்ட்டேயின் உடல்நிலை குறித்து மீண்டும் சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன.
ஜனாதிபதி றொட்றிகோ டுட்டர்ட்டே மூன்று நாட்கள் ஓய்வை எடுப்பதாக 74 வயதான ஜனாதிபதி றொட்றிகோ டுட்டர்ட்டேயின் பேச்சாளர் சல்வடோர் பனெலோ அறிவித்ததைத் தொடர்ந்தே ஜனாதிபதி றொட்றிகோ டுட்டர்ட்டேயின் உடல்நிலை குறித்து மீண்டும் சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஜனாதிபதி றொட்றிகோ டுட்டர்ட்டே விடுமுறையில் இல்லை எனவும், ஆனால் தென் நகரமான தாவோவிலுள்ள தனது வீட்டிலிருந்து பணியாற்றுவார் என சல்வடோர் பனெலோ தெரிவித்திருந்தார்.
அந்தவகையில், இவ்வாரம் ஏன் வீட்டிலிருந்து ஜனாதிபதி றொட்றிகோ டுட்டர்ட்டே பணியாற்றுகிறார் என வினவப்பட்டபோது, குறைந்த இடையூறுகளைக் கொண்டிருக்கவே ஜனாதிபதி றொட்றிகோ டுட்டர்ட்டே விரும்புகிறார் என்றும் அவருக்கும் சில ஓய்வு தேவையென்றும் சல்வடோர் பனெலோ கூறியிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
8 hours ago