2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

தென்னிந்தியாவில் விமான விபத்து; உலக தலைவர்கள் அனுதாபம்

Super User   / 2010 மே 23 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னிந்தியாவில் இடம்பெற்ற விமான விபத்தில் 160 பேர் உயிரிழந்தமைக்கு உலகத் தலைவர்கள் பலர் தமது அனுதாபங்களை வெளியிட்டுள்ளனர்.

ரஷ்ய ஜனாதிபதி, சீன பிரதமர், பாகிஸ்தான் பிரதமர் உட்பட பல உலகத் தலைவர்கள் தமது அனுதாபங்களை தெரிவித்தனர்.

இதற்கிடையில், இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

மேற்படி விமானம், இந்திய கர்நாடக மாநிலத்திலுள்ள மங்களூர் விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டபோது நேற்று விபத்துக்கு உள்ளானது. குறித்த விமானம் விபத்துக்கு உள்ளானபோது தீப்பற்றி எரிந்ததாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டுபாயிலிருந்து  தென்னிந்தியாவுக்கு புறப்பட்டிருந்த விமானமே இவ்வாறு விபத்துக்கு உள்ளானது. குறித்த விமானத்தில் 163 பயணிகளும், 9 விமானப் பணியாளர்களும் பயணித்திருந்தனர்.

இதேவேளை, மங்களூரில் இடம்பெற்ற விமான விபத்தில் 160 பேர் உயிரிழந்தமை தொடர்பில் கேள்விப்பட்ட இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி  மற்றும் கர்நாடக முதல்வர் எடியூரப்பா அதிர்ச்சி வெளியிட்டிருந்தனர்

இந்தியாவில் மிக நீண்டகாலத்தின் பின்னர் இடம்பெற்ற விமான விபத்து இதுவாகும். இந்தியாவில் இறுதியாக கடந்த 2000ஆம் ஆண்டில் விமான விபத்து இடம்பெற்றிருந்ததுடன், இதில் 50 பொதுமக்கள் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--