2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

நெல்சன் மண்டேலாவின் பேத்தி கார் விபத்தில் உயிரிழப்பு

Super User   / 2010 ஜூன் 11 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் கொள்ளுப்பேத்தி கார் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

13 வயதுடைய ஜெனானி மண்டேலா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உலகக் கிண்ண ‌கால்பந்துப் போட்டி ஆரம்ப  விழாவை முன்னிட்டு நடைபெற்ற  இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு திரும்புகையிலேயே இந்த  விபத்து சம்பவித்துள்ளது.

ஜெனானி மண்டேலா கடந்த 9ஆம் திகதி தனது 13ஆவது  பிறந்தநாளை கொண்டாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, உலகக் கிண்ண கால்பந்துப் போட்டிகள்  இன்று மாலை நடைபெறவுள்ள நிலையில், அதில்  நெல்சன் மண்டேலா கலந்து கொள்ள மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .