2021 மே 18, செவ்வாய்க்கிழமை

‘பொருளாதாரத்தையும் நாணயத்தையும் கட்டார் காக்கும்’

Editorial   / 2017 ஜூன் 12 , பி.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏனைய அரேபிய தேசங்களின் பொருளாதாரத் தடைகளுக்கெதிராக, தனது பொருளாதாரத்தையும் நாணயத்தையும் கட்டார் இலகுவாகக் காக்கும் என அந்தாட்டின் நிதி அமைச்சர் அலி ஷெரிப் அல்-எமாடி, நேர்காணலொன்றில், இன்று (12) தெரிவித்துள்ளார்.   

மேலும் கருத்துத் தெரிவித்த எமாடி, பிராந்தியத்திலுள்ள வர்த்தகத்தில் ஏற்படும் பாதிப்பு காரணமாக, பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள நாடுகளும் பணத்தை இழக்கும் எனக் கூறியுள்ளார்.   

“இதனால் நாங்கள் மட்டுமே இழப்போம் என, பலர் நினைக்கின்றனர். நாங்கள் ஒரு டொலரை இழந்தால், அவர்களும் ஒரு டொலரை இழப்பார்கள்” என எமாடி தெரிவித்துள்ளார்.   

பயங்கரவாதத்துக்கு கட்டார் ஆதரவளிக்கிறது எனக் குற்றஞ்சாட்டி, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரேன், எகிப்து உள்ளிட்ட நாடுகள், இராஜதந்திர, போக்குவரத்துத் தொடர்புகளை துண்டிப்பதாக, அண்மையில் அறிவித்திருந்தன. பொருளாதாரத் தடைகள் காரணமாக, இறக்குமதிகளின் எண்ணிக்கை பாதிக்கப்பட்டிருந்ததுடன், தமது வர்த்தகங்களை, பல வெளிநாட்டு வங்கிகள் நிறுத்தியிருந்தன.   

இந்நிலையில், உலகின் மிகப்பெரிய திரவநிலை இயற்கை வாயு ஏற்றுமதியாளரான கட்டாரின் சக்தித் துறையும் பொருளாதாரமும், வழமை போன்றே இயங்குவதாகவும், இதன் காரணமாக, உணவு அல்லது ஏனைய பொருட்களின் விநியோகத்தில் தீவிரமான பாதிப்பு ஏற்படவில்லை எனவும், எமாடி தெரிவித்துள்ளார்.   

மேலும் கருத்துத் தெரிவித்த எமாடி, துருக்கி, கிழக்காசியா அல்லது ஐரோப்பாவிலிருந்து, பொருட்களை கட்டார் இறக்குமதி செய்யலாம் என்றும், நெருக்கடிகளுக்குப் பதிலீர்ப்பாக, தனது பொருளாதாரத்தை கட்டார் இன்னும் பல்வகைமைப்படுத்தலாம் என்றும் கூறியுள்ளார்.   

“எமது கையிருப்புகள், முதலீட்டு நிதிகள், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 250 சதவீத்துக்கும் அதிகம். ஆகவே, என்ன நடக்கின்றது என்றோ அல்லது கட்டார் றியால் பற்றிய எந்தவோர் ஊகங்கள் குறித்தும் மக்கள் கவலைப் படுவதற்கு ஒரு காரணமும் இல்லை என நான் நினைக்கின்றேன்” என்று எமாடி கூறியுள்ளார்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .