2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

இந்திய ரயில் விபத்தில் 15 பேர் பலி

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 20 , மு.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை அதிகாலை ஏற்பட்ட ரயில் விபத்தில் 15 பொதுமக்கள் பலியாகியுள்ளதுடன் 30 பேர் காயமடைந்துள்ளனர்.

சிவபுரி மாகாணத்தின் பாதேர்வா ரயில் நிலையத்தில் தரித்துநின்ற பயணிகள் ரயிலுடன் சரக்கு ரயில் மோதியே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

காயமடைந்தவர்களில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஜுலை மாதம் மேற்கு  வங்காளத்தின் சைந்தியா நகரில்  ஏற்பட்ட ரயில் விபத்தில் சுமார் 60 பயணிகள் பலியானதுடன், 120 பேர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த மே மாதம் பயணிகள் ரயில் தண்டவாளத்தை விலகியோடி சரக்கு ரயிலுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் 150 பயணிகள் பலியாகியிருந்தனர்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .