2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

வட, தென் கொரிய படையினருக்கிடையில் துப்பாக்கிப் பிரயோகம்

Kogilavani   / 2010 ஒக்டோபர் 30 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தென்கொரிய படையினரும் வடகொரிய படையினரும் எல்லைப் பிரதேசங்களில் நேற்று வெள்ளிக்கிழமை பரஸ்பரம் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

காங்வொன் மாகாணத்திற்கு அருகில் இசம்பவம் நடைபெற்றதாக தென்கொரிய தேசிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்று மாலை 5.30 மணியளவில் வடகொரிய படையினர் இரு வேட்டுக்களைத் தீர்த்ததாகவும் தென்கொரிய படையினர் உடனடியாக 3 பதில் துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொண்டதாகவும்  தென்கொரிய தேசிய பாதுகாப்பு  அமைச்சின் ஊடக அலுவலகம்  தெரிவித்துள்ளது.

இத்துப்பாக்கிப் பிரயோகம் தற்செயலாக இடம்பெற்றதா?  என்பதை உறுதிசெய்ய முடியாதென அவ்வறிக்கை மேலும் தெரிவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .