2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

ஆங் சான் சுகி விடுதலையானார்

Super User   / 2010 நவம்பர் 13 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

மியன்மாரின் 15 வருடகாலம் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த எதிர்க்கட்சி அரசியல்தலைவியான ஆங்சான் சுகி அந்நாட்டு இராணுவ ஆட்சியாளர்களால்  இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஜனநாயகத்தை வலியுறுத்தி போராட்டங்களை மேற்கொண்ட  ஆங் சான் சுகி, 1989 ஆம் ஆண்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். 65 வயதான அவர் , கடந்த 21 வருடகாலத்தில் 15 வருடகாலம் அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1999 ஆம் ஆண்டு அவரின் கணவர் பிரிட்டனில் இறந்த போது இறுதிக்கிரியைகளில் கலந்துகொள்வதற்கு ஆங் சான் சுகி அனுமதிக்கப்படவில்லை.

1991 ஆம் ஆண்டு சமாதானத்திற்கான நோபல் பரிசு ஆங் சான் சுகிக்கு வழங்கப்பட்டது. ஆங் சான் சுகியை விடுதலை செய்ய வேண்டுமென மியன்மார் அரசாங்கத்தை உலக நாடுகள் பலவும் வலியுறுத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .