2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

கொசோவோவில் முதலாவது பொதுத்தேர்தல் இன்று

Super User   / 2010 டிசெம்பர் 12 , பி.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

சேர்பியாவிலிருந்து 3 வருடங்களுக்கு முன்னர் பிரிந்த கொசோவோவில் முதலாவது பொதுத்தேர்தல் இன்று  நடைபெறுகிறது.

பதவி விலகிச் செல்லும் பிரதமர் ஹசிம் தாச்சியின் கொசோவோ ஜனநாயகக் கட்சி (டி.பி. கே) இத்தேர்தலில் வெல்லும் எனவும் ஆனால், உறுதியான பெரும்பான்மை கிடைப்பது கடினம் எனவும் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

இக்கட்சிக்கு கொசோவோ ஜனநாயகக் கூட்டணி (எல்.டி.கே.) பெரும் சவாலாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

16 லட்சம் பெரும்பான்மையான அல்பேனிய இன வாக்காளர்களுடன் 120,000 சிறுபான்மையான சேர்பியர்களும் இத்தேர்தலில் கவனத்திற்குரியவர்களாகின்றனர்.

அங்குள்ள சேர்பியர்களில பெரும்பான்மையானோர் கொசோவோ தனிநாடாகியதை விரும்பாதவர்களாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொசோவோ தேர்தல் சட்டத்தின்படி 120 ஆசனங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் சிறுபான்மை சேர்பியர்களுக்கு 10 ஆசனங்கள் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ளன. சேர்பியர்களின் வாக்களிப்பு சதவீதம் அதிகமானால் அவர்களுக்கு 20 ஆசனங்கள் வரை கிடைக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.


  Comments - 0

  • Fahim Tuesday, 14 December 2010 12:30 PM

    கொசோவோ தனி நாடாகியதில் எனக்கும் உடன்பாடில்லை. அவர்களை உருவாக்கிய மேற்கு நாடுகளின் நோக்கம் வெறுமனே ஒரு அடியாளை உருவாக்குவதாகும். இது பலஸ்தீனில் இஸ்ரேலை அமைத்த சூழ்ச்சி போன்றதாகும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .