2025 ஜூலை 12, சனிக்கிழமை

தாய்லாந்தில் அவசரகாலச் சட்டம் நீடிப்பு

Suganthini Ratnam   / 2010 ஜூலை 06 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாய்லாந்து தலைநகர் பாங்கொக் உட்பட 19 மாகாணங்களில் அவசரகாலச் சட்டம் மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டிருப்பதாக அந்த நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

தாய்லாந்தில் மீண்டும் வன்முறைச் சம்பவங்கள் ஏற்படலாம் என்ற அச்சநிலை காரணமாகவே தாய்லாந்து அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தை நீடித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

தாய்லாந்தில் செஞ்சட்டை ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் தாய்லாந்து இராணுவத்தினருக்கும் இடையில் மோதல் இடம்பெற்றதை அடுத்து, தாய்லாந்து தலைநகர் பாங்கொக் மற்றும் ஏனைய 23 மாகாணங்களிலும் கடந்த 19ஆம் திகதி முதல்  ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது.

மேற்படி மோதலில் இதுவரையில் சுமார் 90 பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கும் அதேவேளை,  1500 பேர் காயமடைந்துள்ளனர்.

தாய்லாந்தில் தற்போது ஆட்சியிலுள்ள அரசாங்கத்தை இராஜினமாச் செய்யுமாறும், புதிதாக தேர்தலொன்றை நடத்துமாறும் கோரியே  செஞ்சட்டை ஆர்ப்பாட்டக்காரர்கள் கடந்த மார்ச் மாதம் 14ஆம் திகதி முதல்  ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

எனினும், தனது பதவியை இராஜினமாச் செய்யப் போவதில்லை என தாய்லாந்துப்  பிரதமர் அபிஸித் விஜ்ஜீவா முன்னர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .