2021 மார்ச் 01, திங்கட்கிழமை

ஜோர்டான் அகதி முகாமில் மோதல்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 06 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட ஜோர்டானிலுள்ள ஷடாரி முகாமில் சிரிய அகதிகளுடன் இடம்பெற்ற  மோதலில் காயமடைந்த சுமார் 22 ஜோர்டானிய  பொலிஸ் உத்தியோகத்தர்கள் சனிக்கிழமை (05)  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இம்மோதலின்போது அகதியொருவர் கொல்லப்பட்டதாக  வெளியான செய்தியை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

கூடாரங்கள் மற்றும் வாகனங்களுக்கு தீ வைத்துவிட்டு கற்களை வீசிய அகதிகளை கலைப்பதற்காக பாதுகாப்புப் படையினர்  கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தை மேற்கொண்டனர்.

106,000 அகதிகளைக் கொண்ட  ஸ்ரவ்லிங் முகாம் கடந்த 02 வருடங்களுக்கு முன்னராக திறக்கப்பட்டது. குறைந்த வாழ்க்கைத் தரத்தைக் கொண்டமைந்துள்ள  இம்முகாம் திறக்கப்பட்டதிலிருந்து பல போராட்டங்களைக் கண்டிருக்கின்றதெனவும் வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. 

சிரிய எல்லையிலிருந்து சுமார் 12 கிலோமீற்றர் தொலைவிலுள்ள ஜோர்டான் பாலைவனத்தில்  ஷடாரி முகாம் உள்ளது.  இது உலகிலுள்ள இராண்டாவது பெரிய அகதி முகாம் ஆகும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .