2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

பிரேஸிலில் மேம்பாலம் இடிந்ததில் இருவர் மரணம்

Suganthini Ratnam   / 2014 ஜூலை 04 , மு.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரேஸிலின் உலகக் கோப்பை போட்டி நகரமான பெலோ ஹொரிஸோன்ரே பகுதியில் மேம்பாலம் ஒன்று இடிந்து வாகனங்கள் மீது விழுந்ததால், 02 பேர் மரணமடைந்துள்ளதாக அந்த நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் கொங்கிறீட் மற்றும் உருக்கிலான இந்தப் பாலமானது  மிகவும் பரபரப்பாக இருந்த நெடுஞ்சாலையின் மீது இடிந்து விழுந்துள்ளது.  இதன்போது பஸ் வண்டி ஒன்று 02 லொறிகளுடன் மோதியதுடன், கார் ஒன்றும் நசுங்கிப் போயுள்ளது. 

மேற்படி தென் -கிழக்கு பிரேஸில் நகரத்தில் அடுத்த வாரம் அரையிறுதி கால்பந்து போட்டி நடைபெறவுள்ளது.

இதன்போது, பஸ் வண்டிச் சாரதியும் மற்றுமொருவரும்  மரணமடைந்துள்ளனர். அத்துடன், 22 பேர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .