2021 ஜனவரி 27, புதன்கிழமை

சுப்பர் 8இல் ஊரெழு றோயல்

Gopikrishna Kanagalingam   / 2016 ஜூலை 10 , பி.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

பருத்தித்துறை கால்பந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் வல்வெட்டித்துறை நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக் கழகம் நடாத்தும் இவ்வாண்டுக்கான வட மாகாண வல்லவன் தொடரின் சுப்பர் 8 சுற்றுக்கு ஐந்தாவது அணியாக, ஊரெழு றோயல் விளையாட்டுக் கழகம் தகுதிபெற்றுள்ளது. 

றோயல் விளையாட்டுக் கழகத்துக்கும் மன்னார் அந்தோனியார்புரம் சென். அன்ரனிஸ் விளையாட்டுக் கழகத்துக்குமிடையிலான நான்காவது சுற்றுப் போட்டியொன்றில், இரண்டாம் பாதியின்போது, 3-1 என்ற கோல் கணக்கில் றோயல் விளையாட்டுக் கழகம் முன்னிலையில் இருந்தபோது, மத்தியஸ்தர்கள் தவறாக தீர்ப்பு வழங்குவதாகக் கூறி, சென். அன்ரனிஸ் விளையாட்டுக் கழகம் போட்டியிலிருந்து வெளியேறிய நிலையில், றோயல் விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்தே, றோயல் விளையாட்டுக் கழகம் சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெற்றது. 

இப்போட்டியில், றோயல் விளையாட்டுக் கழகம் சார்பாக கஜகோபன் இரண்டு கோல்களையும் நேசன் ஒரு கோலினையும் பெற்றதோடு, சென். அன்ரனிஸ் விளையாட்டுக் கழகம் சார்பாகப் பெறப்பட்ட கோலை, சுதர்சன் பெற்றிருந்தார். இப்போட்டியின் நாயகனாகத் தெரிவு செய்யப்பட்ட றோயல் விளையாட்டுக் கழகத்தின் கஜகோபனுக்கான பணப்பரிசையும் பதக்கத்தையும், கழுகுகள் விளையாட்டுக் கழக நலன்விரும்பி சி.செல்வமாணிக்கம் வழங்கிக் கௌரவித்திருந்தார். 

இதேவேளை, மன்னார் பனங்கட்டிகொட்டு சென். ஜோசப் விளையாட்டுக் கழகமும் மணற்காடு சென். அன்ரனிஸ் விளையாட்டுக் கழகமும் கடந்த வியாழக்கிழமை (07) மோதிய நான்காவது சுற்றுப் போட்டியொன்றில் வெற்றிபெற்ற சென். ஜோசப் விளையாட்டுக் கழகம், நான்காவது அணியாக சுப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .