2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

தேசிய விளையாட்டு விழாவின் பாதுகாப்புக்காக 1500க்கு மேற்பட்ட பொலிஸார்

Super User   / 2010 ஒக்டோபர் 28 , பி.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

ஏதிர்வரும் சனிக்கிழமை முதல் மூன்று நாட்களுக்கு கண்டியில் நடைபெறவுள்ள தேசிய விளையாட்டு விழாவின் பாதுகாப்புக்காக 1500க்கு மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என மத்திய மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்தார்.

இன்று மாலை கண்டி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

சனிக்கிழமை 30ஆம் திகதி மாலை 3.00 மணிக்கு பிரதமர் டீ.எம்.ஜயரட்ன தலமையில் ஆரம்பமாகவுள்ள இவ்விளையாட்டு விழாவின் நிறைவு விழாவுக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார்.

விளையாட்டு விழாவுக்கு வருகை தரும் 4000க்கு மேற்பட்ட வீரர்களின் பாதுகாப்பையும் பிரதம அதிதிகளின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் விதத்தில் விஷேட அதிரடி படையினரும் கடமையில் ஈடுத்தப்படுவர் என அவர் தெரிவித்தார்.

இதை தவிர இராணூவத்தினரினதும் கடற்படையினரும் உதவி தேவைப்பட்டால் பெற்றுக் கொள்ளப்படும் எனவும் அவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

விளையாட் வீர வீராங்கனைகள் தங்கியிருக்கும் 15க்கு மேற்பட்ட தங்குமிடங்களுக்கும் விஷேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .