2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

கால்பந்தாட்ட மைதானம் எதிர்வரும் 19 ஆம் திகதி திறப்பு

Kogilavani   / 2012 நவம்பர் 09 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                                             (எஸ்.கே.பிரசாத், கு.சுரேன்)
ஜேர்மன் வெளிநாட்டு அபிவிருத்தி அமைப்பு மற்றும் பீபா ஆகியவற்றின் நிதியுதவியுடன் ஏ9 வீதி அரியாலைப் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் கால்பந்தாட்ட மைதானம் எதிர்வரும் 19 ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளதாக யாழ். கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் எஸ்.அன்ரனிப்பிள்ளை தெரிவித்தார்.

இந்நிகழ்வில், சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் யோசப் பிளட்பர் கலந்துகொள்ளவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திற்கு இன்று வெள்ளிக்கிழமை வருகை தந்த இலங்கை கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் தலைவர் மனிலா பெர்னான்டோவின் புதல்வர் உட்பட சம்மேளனத்தின் உயர் அதிகாரிகள் குழு இந்த மைதானத்தின் கட்டுமானப்பணிகளை பார்வையிட்டதுடன் திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகள் குறித்து யாழ்.கால்;பந்தாட்ட சம்மேளன அதிகாரிகளுடன் கலந்துரையாடியதாக அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .