A.P.Mathan / 2010 ஒக்டோபர் 07 , பி.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்)
இலங்கை கிரிக்கெட் சபை மாவட்டங்களுக்கு இடையே 15வயதுக்கு உட்பட்டவர்களுக்காக நடத்திய சுற்றுப் போட்டியில் திருமலை அணியை யாழ்ப்பாணம் அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மைதானத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற போட்டியில் திருகோணமலை மாவட்ட அணியை எதிர்கொண்டு யாழ்ப்பாணம் மாவட்ட அணி மோதியது.
முதலில் துடுப்பெடுத்தாடிய திருகோணமலை மாவட்ட அணி 85 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்தது. பதிலுக்கு விளையாடிய யாழ்ப்பாண அணி 3 விக்கெட் இழப்பிற்கு 89 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
மட்டக்களப்பு, மன்னார் மாவட்டங்களுக்கு இடையிலான போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட அணியினர் 44 ஓட்டங்களால் வெற்றி பெற்றனர்.
முதலில் துடுப்பெடுத்தாடிய மட்டக்களப்பு மாவட்ட அணியினர் 37 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 149 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர். எஸ்.நிரூஷன் 27 ஓட்டங்களையும் ஆர்.ஜனதீபன் 14 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பந்து வீச்சில் எம்.ஏ.எம்.நிசாம் 8 ஓவர்கள் பந்து வீசி 27 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் எஸ்.கிரிதரன் 9 ஓவர்கள் பந்து வீசி 29 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும் பெற்றுக்கொண்டனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மன்னார் அணியினர் 34.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 95 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியை தழுவிக் கொண்டனர்.
மன்னார் அணி சார்பாக எஸ்.தினேசன் 20 ஓட்டங்களையும் எம்.எஸ்.றிஸ்வான் 16 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்துவீச்சில் ஆர்.சஞ்சிவ் 8 ஓவர்கள் பந்து வீசி 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் ஜே.மிதுசன் 8 ஓவர்கள் பந்து வீசி 20 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும் பெற்றுக் கொண்டனர்.
நாளை வெள்ளிக்கிழமை திருகோணமலை மாவட்ட அணியினரை எதிர்த்து மட்டக்களப்பு மாவட்ட அணியினரும், மன்னார் மாவட்ட அணியினரை எதிர்த்து வவுனியா மாவட்ட அணியினரும் மோதுகின்றனர்.
7 hours ago
05 Nov 2025
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
05 Nov 2025
05 Nov 2025