2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

ஒலிம்பியாட் போட்டியில் மன்னார் மாணவனுக்கு வெண்கலப்பதக்கம்

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 14 , மு.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.ஜெனி)

சர்வதேச ரீதியில் நடைபெற்ற 9ஆவது சர்வதேச ஒலிம்பியாட் போட்டியில் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி மாணவன் செல்வன் ஜே.யூட் மிதுஷன் பிகிராடோ வெண்கலப்பதக்கம் பெற்றுள்ளதாக மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் நேற்று தெரிவித்தார்.

இலங்கை, இந்தியா, சீனா, இந்தோனேஷியா, ஈரான், மலேசியா, நேபாளம், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தென்னாபிரிக்கா, கொரியா, தாய்வான்  ஆகிய நாடுகளுக்கிடையில் சர்வதேச ரீதியில் நடைபெறும் ஒலிம்பியாட் போட்டியின் 9ஆவது சர்வதேசப் போட்டியானது ஒக்டோபர் மாதம் 29 தொடக்கம் நவம்பர் முதலாம் திகதிவரை புதுடில்லியில் நடைபெற்றது.

இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி இப்போட்டியில் பங்குபற்றிய மிதுஷன் பிகிராடோ இதில் வெண்கலப்பதக்கம் பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.

இவர் மாகாணமட்டத்தில் நடைபெற்ற ஒலிம்பியாட் போட்டியில் வடமாகாணத்தில் முதலாம் இடத்தைப் பெற்று தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவானார்.  தேசிய மட்டப் போட்டியில் 8ஆம் இடத்தைப் பெற்று சர்வதேச போட்டிக்குத் தெரிவான இவர், சர்வேதேசப் போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப்பதக்கத்தை பெற்றுள்ளார்.

இவரை மன்னார் வலயக்கல்வி அலுவலகத்தின் சார்பாக பாராட்டுகின்றோமென மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எம்.சியான் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .